லேபிள்கள்

28.5.13

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகல்: இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்


          பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (மே 28) காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


        
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியானது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கப் பெறாத 75 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு பாடங்களின் விடைத்தாள் நகல்கள் கோரி விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகின்றன.
           
இந்த நிலையில், விடைத்தாள் நகல்கள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்தி:
         
வேதியியல் பாட விடைத்தாள் நகல் கோரியவர்கள், விடைத்தாளை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த நகலை பதிவிறக்கம் செய்ய ங்ஷ்ஹம்ள்ர்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீர்.ண்ய் என்ற இணையதள முகவரிக்குச் சென்று கீழ்க்காணும் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
1.
விடைத்தாள் நகல் கோரி ஆன்-லைனில் விண்ணப்பித்த பத்து இலக்க விண்ணப்ப எண் அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சலானில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க ழ்ங்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங் ய்ன்ம்க்ஷங்ழ்.
2.
பதிவெண் 3. பிறந்த தேதி
4.
மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள டிஎம்ஆர் கோட் விவரம்
           
மறுகூட்டலுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? வேதியியல் பாட விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு, அந்தப் பாடத்தில் மறுமதிப்பீட்டுக்கோ அல்லது மறுகூட்டலுக்கோ விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் examsonline.co.in என்ற இணையதளத்துக்குச் சென்று, அங்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி மே 29 முதல் 31-ஆம் தேதி பிற்பகல் 1 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
                    
ஆன்-லைனில் விண்ணப்பித்த பிறகு பதிவிறக்கம் செய்யப்படும் ஸ்டேட் ஆஃப் இந்தியா சலானில் குறிப்பிட்டுள்ள தொகையை எஸ்.பி.. வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் மே 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
                 
மற்ற பாடங்களுக்கான விடைத்தாளின் நகல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் நாள்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக