லேபிள்கள்

30.5.13

பள்ளிக்கல்வித் துறை - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (1) துறை நாள் 09.05.2013 அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக