சிறப்பு ஆசிரியர் பணி:
உத்தேச பதிவுமூப்பு பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியீடு,7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்:
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி இடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். அவர்களின் உத்தேச பதிவுமூப்பு பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான பதிவுதாரர்கள் தாங்கள் பதிவு செய்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பரிந்துரை விவரங்களை ஜூன் 7–ந் தேதிக்குள் நேரில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக