தமிழக கல்லூரிகளில் உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்
தமிழகத்தில் உள்ள அனைத்து மணவ-மாணவியரும் தங்களது உள்தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு எதிர்த்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் விவாதிக்கப்பட்டது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி தமிழிலோ, அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக