லேபிள்கள்

31.5.13

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 89
சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி




தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் 27ம் தேதி துவங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 3012 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 13ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது. சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 89 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் மாணவர்கள் 86 சதவீதம். மாணவிகள் 92 சதவீதம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக