லேபிள்கள்

27.5.13


தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் மாறதல் கலந்தாய்வு 28ந் தேதி தொடக்கம்

 28ந் தேதி முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல் நடைபெறுகிறது. மேலும் அன்று நடுநிலை பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு ஆணையும் வழங்கப் படுகிறது
.

அன்று பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத் திற்குள் மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது.

29ந் தேதி

29ந் தேதி முற்பகல் தொடக்க பள்ளி தலைமை யாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது. அன்று பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியராக பதவி உயர்வு ஆணை வழங் கப்படுகிறது.

30ந்தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மாறுதல் வழங்கப்படுகிறது. அன்று பிற்பகல் இடைநிலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்குதல்(ஒன்றியம் விட்டு ஒன்றியம் ) நடைபெறுகிறது.
31ந் தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக