லேபிள்கள்

31.1.14

குரூப் 2 தேர்வு : பிப்.5ல் கவுன்சலிங்

குரூப் 2 பணியில் 2009-2011ல் அடங்கிய பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்து தேர்வு கடந்த 30.7.2011 அன்று நடந்தது.
அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நேர்காணல் பதவிகளுக்கு மூன்று கட்ட கவுன்சலிங், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு 4ம் கட்ட கவுன்சலிங் நடத்தப்பட்டன. எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நேர்காணல் பதவிக்கு 4ம் கட்ட கவுன்சலிங், நேர்காணல் அல்லாத பதவிக்கு 5ம் கட்ட கவுன்சலிங் வருகிற 5, 6ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு- கவுன்சிலிங் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக