:
'எப்சிபா' அறக்கட்டளை
சார்பில், 'மறப்போம்
மன்னிப்போம்' என்ற
தலைப்பிலான ஓவியப்போட்டி,
பிப்., 15ம்
தேதி துவங்குகிறது.
'எப்சிபா'
அறக்கட்டளை,
'ஹெரிகான்ஸ்' எனும்,
'எப்சிபா' பாரம்பரிய
பாதுகாப்பு நிறுவனமும்
இணைந்து, அறக்கட்டளையின்,
ஐந்தாம் ஆண்டு
நிறைவு விழாவை
முன்னிட்டு, பள்ளி
மாணவ, மாணவியருக்கான
ஓவியப் போட்டியை
நடத்துகின்றன. வரும்,
பிப்., 15, 16, 22, 23, மார்ச்
1 மற்றும் 2 ஆகிய
நாட்களில், சென்னை,
கே.கே.நகர்
அருகில் உள்ள,
எம்.ஜி.ஆர்.,
நகர், வ.உ.சி.,
தெருவில் உள்ள,
'அறக்கட்டளை அலுவலக
வளாகத்தில் நடக்கும்.
இதில் பள்ளி
மாணவ, மாணவியர்,
எல்.கே.ஜி.,
முதல், பிளஸ்
? வகுப்பு வரை,
ஏழு பிரிவுகளாக
பிரிக்கப்பட்டு, ஓவியப்
போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஓவியப் போட்டியில்
பங்கேற்பவர்களுக்கு, 'ஏ
3' அளவுள்ள, அட்டை
மட்டுமே தரப்படும்;
உபகரணங்களை, பங்கேற்பாளர்கள்
கொண்டு வர
வேண்டும். போட்டி
குறித்த மேலும்
விவரங்களை, 044 - 2471 3239, 2474 5944 என்ற
எண்களில் தொடர்பு
கொண்டு அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக