லேபிள்கள்

31.1.14

பான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவு

பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப பாரத்துடன் அதற்கானதொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை மட்டும் காட்டினால் போதுமானதாக இருந்தது.ஆனால்தற்போது குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அதனுடன் ஒரிஜினல் சான்றிதழ்களையும் அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு தரப்பில் எழுந்த கண்டனத்திற்கு பி்னனர் இந்த புதிய உத்தரவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் , பழைய முறையையே நடைமுறைப் படுத்தப்படும் எனவும் நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக