லேபிள்கள்

28.1.14

முதன்மை கல்வி அதிகாரிகள் 7 பேர் மாற்றம்; பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு

தொடக்க கல்வித்துறை துணை இயக்குனர் புகழேந்தி( முதன்மை கல்வி அதிகாரி ரேங்க்) மாற்றப்பட்டு திருவண்ணாமலை அனைவருக்கும் கல்
வி திட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதுவரை அந்த பணியில் இருந்து திருவண்ணாமலை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி நூர்ஜகான் சென்னையில் உள்ள தொடக்க கல்வித்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அருண்பிரசாத், தமிழ்நாடு தொடக்க கல்வி துணை இயக்குனராக மாற்றப்பட்டார்.
தொடக்க கல்வி துணை இயக்குனர் பொன்னையா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா, கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டார்.
கோவை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி லத்திகா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் சுப்பிரமணியன் பள்ளிக்கல்வி மின் ஆளுமை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். சேலம் மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.மனோகரன் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக