வகுப்பறையில்,
தலைமை ஆசிரியர்
மது அருந்துகிறார்
என, மாணவர்கள்
கூறிய புகாரையடுத்து,
அசகளத்தூர் பள்ளியில்,
மாவட்ட கல்வித்
துறை அதிகாரிகள்,
விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்
மாவட்டம், தியாகதுருகம்
அடுத்த, அசகளத்தூர்
அரசு மேல்நிலை
பள்ளியில், 28ம்
தேதி நடந்த,
ஊரக விளையாட்டுப்
போட்டி பரிசளிப்பு
விழாவில் பங்கேற்ற,
அழகுவேலு பாபு
எம்.எல்.ஏ.,
விடம், தலைமை
ஆசிரியர் மகாலிங்கம்,
வகுப்பறையில், மது
அருந்துவதாக, அப்பள்ளி
மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, எம்.எல்.ஏ.,
ஆட்சியர் சம்பத்
மற்றும் மாவட்ட
முதன்மை கல்வி
அதிகாரி, மார்ஸ்
ஆகியோரிடம், தலைமை
ஆசிரியர் மீது,
நடவடிக்கை எடுக்கக்
கோரினார். இது
குறித்த செய்தி,
நேற்று, 'தினமலர்'
நாளிதழில் வெளியாகியது.
இதையடுத்து, மாவட்ட
இடைநிலை கல்வி
அதிகாரி, தனமணி
தலைமையில், துறை
அதிகாரிகள், நேற்று,
அசகளத்தூர் பள்ளியில்,
விசாரணை நடத்தினார்.
அங்கு, தலைமை
ஆசிரியர் மீதான
புகார்கள் குறித்து,
ஆசிரியர்கள், மாணவர்களிடம்,
விசாரணை நடத்தினர்;
அதன் அறிக்கையை,
மாவட்ட முதன்மை
கல்வி அதிகாரிக்கு
அனுப்பியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக