''அறிவு
சார்ந்த சமுதாயத்தை
ஆசிரியர்கள் உருவாக்க
வேண்டும்,'' என,
தமிழக கவர்னர்,
ரோசய்யா, பள்ளி
விழாவில் பேசினார்.
கும்பகோணம்
நகர மேல்நிலைப்
பள்ளியின், 150ம்
ஆண்டு விழா,
நேற்று நடந்தது.
விழாவிற்கு, பள்ளி
நிர்வாகக் குழு
உறுப்பினர், ஜி.ஆர்.மூப்பனார்
தலைமை வகித்தார்.
முன்னதாக பள்ளியின்,
150ம் ஆண்டு,
நினைவு வளைவு
கல்வெட்டை, மத்திய
கப்பல் போக்குவரத்து
துறை அமைச்சர்,
வாசன் திறந்து
வைத்தார். விழா
மலரை, தமிழக
கவர்னர், ரோசய்யா
வெளியிட்டு பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள,
150ம் ஆண்டு
விழாவை, கடந்த,
சில பள்ளிகளில்,
இதுவும் ஒன்று.
21ம் நூற்றாண்டில்,
அறிவு சார்ந்த
சமுதாயத்தை, ஆசிரியர்கள்
உருவாக்க வேண்டும்.
நம் நாட்டின்
முன்னேற்றம், தற்போதுள்ள,
தலைமுறையிடம், நாம்
எதிர்பார்க்க வேண்டியிருப்பதால்,
அதற்கேற்ற வகையில்,
மாணவர்களிடம், அன்பு,
நேர்மை, அறிவு
ஆகியவற்றை, ஆசிரியர்கள்
கற்றுத் தர
வேண்டும். நாட்டின்
ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு,
நாம் கண்டுபிடிக்கும்
திறனில் தான்
உள்ளது. எனவே,
மாணவர்கள், கடின
உழைப்புடன், தமது
திறமைகளை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்
பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக