லேபிள்கள்

30.1.14

இன்று தியாகிகள் தினம்



இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாள் ( ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம். நாடு சுதந்திரம் பெற்றதில், மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. 1948 ஜன.30ம் தேதி, காந்தியடிகள், சுட்டுக்
கொல்லப்பட்டார். இந்தியாவின் துக்க நாளாக இது அமைந்தது. அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில், இன்று இந்தியா முழுவதும் காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. உலகம் முழுவதிலும் பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு. இந்த தியாகிகள் நாளில் நாட்டுக்கு உழைத்த, அவர்களின் கருத்துக்களையும், கொள்கைகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகளின் கனவுகள் நனவாகிட அனைவரும் உழைத்திடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக