லேபிள்கள்

28.1.14

மதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை

மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை
பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை எச்சரித்துள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ்களை காட்டி, சிலர், உயர்கல்வி மற்றும் அரசு பணியில் சேர்ந்து விடுகின்றனர். இதை தவிர்க்க, அவர்களின் பிளஸ் 2, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பப்பட்டு, உண்மைத் தன்மை சான்று பெறப்படுகிறது.

மதிப்பெண் சான்றிதழ்களை, அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பும்போது, வகுப்புக்கு தகுந்தாற்போல், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம், அனுப்ப வேண்டும். ஆனால், சில பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்கள், நேரடியாக, அரசு தேர்வுத் துறைக்கு சான்றிதழ்களை அனுப்பிவைத்து, உண்மைத் தன்மை சான்றை பெற்று வருகின்றனர். இதனால், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, விதிமுறையை மீறி, மதிப்பெண் சான்றிதழ்களை நேரடியாக அனுப்பி வைக்க கூடாது என, தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக