லேபிள்கள்

11.7.14

வரி செலுத்துனர் ஆவலுடன் எதிர்பார்த்த சலுகை: வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு.

நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும் அருண் ஜேட்லி, வருமான வரி செலுத்தும் சிறிய, நடுத்தர, மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார். 

*வருமான வரி வரம்பு ரூ.2 லட்சம் என்பதில் இருந்து, ரூ.2.5 லட்சமாக உயர்த்தப் படுவதாகக்கூறினார் அருண் ஜேட்லி. 

*80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

*வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.

*மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக