லேபிள்கள்

6.7.14

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியைக்கு பாராட்டு விழா

தொடக்கக் கல்வித் துறையில் 2003 ம் ஆண்டு முதல் 6,7,8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அவ்வாறு நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அடைய அரசாணை 166, நாள்; 07.06.1999. தடையாக உள்ளது. இதற்காக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக போராடி வருகிறது. இருப்பினும் அதே அரசாணை 166,நாள் 07.06.199 ன் படி இவ்வாண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றிய பட்டதாரி ஆசிரியை திருமதி. சங்கீதா அவர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு TNGTF ன் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் நேற்று 05.07.2014 பாராட்டு விழா நடத்தினார்கள். TNGTF  மாநில பொதுச்செயலாளர்  திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் கூட்டத்தில் கலந்து கொண்டு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். கூட்டமைப்பின் தோழர்களும் விழாவில் கலந்து கொண்டு பட்டதாரி ஆசிரியை பாராட்டினர்கள்.



செய்தி; திரு.ஜோசப் சேவியர், திண்டுக்கல் மாவட்ட செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக