அண்ணா பல்கலையில், பி.இ., கலந்தாய்வு நாளை துவங்குகிறது. புதிதாக இரண்டு பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க, ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு) அமைப்பிற்கு, கால தாமதம் ஏற்பட்டதால், கூடுதல் கால அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தது.
இதை ஏற்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகத்தில், பி.இ., கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. தமிழக கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி அளித்தபின், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலை, இணைப்பு அங்கீகாரம் வழங்கியது.கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி, பழநி, அறிஞர் அண்ணா தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய, இரு கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலை, இணைப்பு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி, நாளை காலை 10:00 மணிக்கு, பல்கலை வளாகத்தில், பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. நாளை 3,000 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பல்கலை நிர்வாகம் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக