லேபிள்கள்

8.7.14

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்: இணையதளத்தில் நாளை வெளியீடு!

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு மறுகூட்டல் கோரியவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன.

இதில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல்students.sslc14rt.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வெளியிடப்படும்.இந்தப் பட்டியலில் இல்லாத மாணவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண்களில் மாற்றம் உள்ள ஜூலை 9 முதல் 11 வரை தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக