மவுலிவாக்கத்தில், 'சீல்' வைக்கப்பட்ட 11 மாடி கட்டடம் அருகே செயல்படும் அரசு பள்ளியில், சுழற்சி முறையில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
போரூர், மவுலிவாக்கத்தில் கடந்த, 28ம் தேதி, 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில், 61 பேர் பலியாயினர்.அதன் அருகில் உள்ள மற்றொரு, 11 அடுக்குமாடி கட்டடத்தின் தன்மை மோசமாக இருப்பதாக, அந்த கட்டடத்திற்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.அதன் அருகில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இதனால், மாற்று ஏற்பாடாக, அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், சுழற்சி முறையில், அந்த பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த, அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.அதன்படி, காலை, 8:30 மணி முதல் மதியம், 1:30 வரை, 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு மாணவர்களுக்கும், அதேபோல், மதியம், 2:00 மணி முதல், 5:00 மணி வரை, 7ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கும். வகுப்புகள் நடைபெறும்.இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, அதே பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு மாற்ற முடிவு செய்து உள்ளோம். இரண்டு பள்ளிகளையும் சேர்த்து, மொத்த மாணவர்களுக்கான கட்டமைப்பு இல்லாததால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த முடிவு செய்து உள்ளோம். நாளை முதல் வகுப்புகள் நடைபெறும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக