சுயநிதி பிரிவில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கினால் அதற்கான தொகை தலைமை ஆசிரியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்' என கல்வித்துறை
எச்சரித்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. ஆனால், 'அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு அவை வழங்கப்படாது' என அரசு உத்தரவு உள்ளது. ஆனால் 2011-12, 2012- 13ல் சில மாவட்டங்களில் சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இது, ஆண்டு தணிக்கையின் போது கண்டறியப்பட்டது.'இப்பிரச்னை குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விவாதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாது என்பது அரசின் கொள்கை முடிவு. அதையும் மீறி வழங்கியிருந்தால், அத்தொகை தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக