லேபிள்கள்

27.6.15

30 ஆம் தேதி நடைபெறும் SSA கணினி விவரப்பதிவாளர் காலிப்பணி - விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம்

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் காலியாகவுள்ள கணினி விவரப்பதிவாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என அறிóவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் 29 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நாமக்கல் தேற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட திட்ட அலுவலகத்திற்குநேரில் சென்று அழைப்பாணையின் நகல் பெற்றுக் கொள்ளலாம்.

தகுதியில்லாத நபர்கள் அதற்கான காரணத்தினை மாவட்ட திட்ட அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் தெரிந்துகொள்ளலாம். நேரில் வர இயலாதவர்கள் மாவட்ட திட்ட அலுவலகத்தின் தொலைபேசி எண் 04286-227194 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காரணத்தினை அறிந்து கொள்ளலாம்.மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக