லேபிள்கள்

24.6.15

கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு

 கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்க 19 மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்ததால் குலுக்கல் முறையில் மாணவர்கள் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
       கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள 156 மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அரசு உத்தரவிட்டது. மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 617 இடங்களுக்கு ஜூன் 15 ஆம்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் 19 பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்.

இதையடுத்து இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக ஜூன் 26 ஆம் தேதி குலுக்கல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் எம்.கோவிந்தராஜ் கூறியது: கட்டாய இலவசக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மதுரையில் பெரும்பாலான பள்ளிகளில் 25 சதவீத மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்டது. குறைவான சேர்க்கை உள்ள பள்ளிகளில் நவம்பர் மாதம் வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதில் 19 மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அந்த பள்ளிகளில் ஜூன் 26 ஆம் தேதி குழுக்கல் முறையில் சேர்க்கை நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரிக் பள்ளிகளின் காலியிடங்கள் குறித்த விபரங்கள் ஜூன் 27 ஆம் தேதி கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக