லேபிள்கள்

27.6.15

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்

மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளியாக மாற்றும்படி, அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

நடப்பு கல்வியாண்டில், மாற்றுத்திறனாளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், 
மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளிகளை உருவாக்க,மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்கு, ஒரு அரசு பள்ளியை தேர்வு செய்து, அதை மாற்றுத்திறன் கொண்டவர்கள், மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படிக்கும் வகையில், வகுப்பறை சூழலை மாற்றுதல், சிறப்பு ஆசிரியர் நியமனம், சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள்,குடிநீர் வசதி, சாய்தளங்கள் போன்றவற்றை ஏற்படுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக