லேபிள்கள்

23.6.15

அரசு உதவித்தொகையில் முறைகேடு: பாலிடெக்னிக் மாணவர்கள் புகார்

பாலிடெக்னிக்களில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடப்பதாகசிவகங்கை கலெக்டரிடம், மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.


தனியார் பாலிடெக்னிக் ஆதிதிராவிட மாணவருக்கு, அரசு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
நிர்வாக ஒதுக்கீடு மாணவருக்கு ஆண்டுக்கு 24,400 ரூபாய்; அரசு ஒதுக்கீடுக்கு, 6,500 வழங்கப்படும்.இத்தொகையில் கல்விக்கட்டணம், கல்லுாரிக்கு 'ஆன்லைன்' மூலம் அனுப்பப்படும். மீத தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

ஆண்டுக்கு 35 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தும் நிர்வாக ஒதுக்கீடு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் 24,400 ரூபாய்.இத்தொகை போக 10,600 ரூபாயை மாணவர்களிடம் கல்லுாரி நிர்வாகத்தினர் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மாணவர்களுக்கு 6,500 ரூபாய் மட்டுமே வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து மானாமதுரை மாணவர் ராஜ்குமார், கலெக்டர் (பொறுப்பு) இளங்கோவிடம் அளித்த புகாரில், 'அரசின் உதவி தொகையை மாணவர்களிடம் அப்படியே வழங்க வேண்டும்.ஆனால் எங்கள் கல்லுாரியில் அரசு ஒதுக்கும் நிதியை குறைத்து வழங்குகின்றனர்; இதில் முறைகேடு நடந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் உமா கூறுகையில், ''புகாருக்கு உள்ளான கல்லுாரியில் 152 மாணவர்களுக்கு 3.81 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிவிட்டது.மாணவர்கள் அளித்த புகாரின்படி பாலிடெக்னிக்களில் விசாரணை நடத்தப்படும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக