பி.எஸ்சி., பாலிடெக்னிக் முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான 'கவுன்சிலிங்' காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் நேற்று தொடங்கியது.
ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. 91 ஆயிரத்து 371 இடங்கள் காலியாக உள்ளன.இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அழைப்பு கடிதம், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதல் நாளான நேற்று காலை 9 மணிக்கு விளையாட்டு வீரர்களுக்கும், 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும்,மாலை நான்கு மணிக்கு 'கெமிக்கல்', 'லெதர்', 'பிரிண்டிங்' பிரிவுகளை எடுக்கும் மாணவர்களுக்கான 'கவுன்சிலிங்' நடந்தது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 993 இடங்களுக்கு 50 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். இவர்களில் 44 பேர் பங்கேற்றனர். முன்னாள் ராணுவவீரர் வாரிசுதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 இடங்களில் 23 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களுக்கு, 16 மாணவர்கள் பங்கேற்றனர். 'பிரிண்டிங்' பிரிவில் 4 இடங்களுக்கு 2 பேரும், 'கெமிக்கல்' பிரிவில் 125 இடங்களுக்கு 100 பேரும், 'லெதர்' பிரிவில் மூன்று பேரும்பங்கேற்று, சேர்க்கை கடிதம் பெற்றனர்.இன்று பொதுப்பிரிவான சிவிலுக்கும், 30-ம் தேதி மெக்கானிக்கல், ஜூலை 5-ம் தேதி எலக்ட்ரிக்கல் பிரிவுக்கும் 'கவுன்சிலிங்' நடக்கிறது. 9-ம் தேதி பிளஸ் 2-வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்த, பி.எஸ்சி., மாணவர்களுக்கும் 'கவுன்சிலிங்' நடக்கிறது. ஏற்பாடுகளை நேரடி சேர்க்கை செயலாளர் மாலா, ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்திருந்தனர்.
ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. 91 ஆயிரத்து 371 இடங்கள் காலியாக உள்ளன.இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அழைப்பு கடிதம், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக