லேபிள்கள்

17.2.16

10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் சரியான விடைகளை கோடிட்டு அடித்தால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது

10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் விடைத்தாளில், எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். நன்றாக படிக்கும் மாணவர்கள் சிலர் தவறாக சில விடைகளை எழுதியதாக தெரிந்து விட்டால், சரியான விடைகள் அனைத்தையும் அடித்துவிட்டு, அந்த தேர்வில் மதிப்பெண் எதுவும் எடுக்காமல் சிறப்பு உடனடித்தேர்வை எழுதுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். 


அதில் மாணவ- மாணவியர் விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே முழுவதுமாக கோடிட்டு அடிக்கும் செயல், இனி ஒழுங்கீனச்செயலாக கருதப்படும் என தெரிவித்தார். மேலும் அவ்வாறு விடைத்தாளில் விடைகளை அடிக்கும் மாணவ- மாணவிகள் அடுத்து வரும் 2 பருவங்களிலும் தேர்வு எழுத முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக