லேபிள்கள்

15.2.16

சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் -தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்

பள்ளிகளில் மாயமான கம்ப்யூட்டர் சயின்ஸ் அச்சடித்த புத்தகங்கள் வீணாகும் அவலம்சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரை அறிமுகம்
செய்யப்பட்ட,'கம்ப்யூட்டர் சயின்ஸ்' என்ற கணினி அறிவியல் பாடம், ஐந்து ஆண்டுகளாக மாயமாகிவிட்டது. அதனால்,அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் புத்தகங்கள், பாடநுால்கழககிடங்கில் மக்கி போகும் நிலையில் உள்ளன.


தமிழகத்தில், 2011ல், சமச்சீர்கல்வி பாடத்திட்டம், 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை அறிமுகமானது.அப்போது, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், சுற்றுச்சூழல்அறிவியல் ஆகியவற்றுடன், கணினி அறிவியல் பாடமும் அறிமுகம்செய்யப்பட்டது.

முதலாம்ஆண்டில், கணினி அறிவியலுக்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டு வினியோகம்செய்யப்பட்டன. அடுத்து வந்த ஆண்டுகளில், கணினி அறிவியல் பாடமும், புத்தகமும்பள்ளிகளுக்கு வழங்கப்படாமல் மாயமாகின. இதற்காக அச்சடிக்கப்பட்டபுத்தகங்கங்கள், பாடநுால் கழக கிடங்கில் முடங்கி, கரையான் அரித்து மக்கும்நிலையில் உள்ளதாக தகவல்கள்வெளியாகி உள்ளன.அனைத்து தனியார் பள்ளிகளிலும், 1ம்வகுப்பு முதல், கணினி அறிவியல் பாடம் மற்றும், 'ஸ்மார்ட் க்ளாஸ்' என்றகணினிவகுப்பு கண்டிப்பாகநடத்தப்படுகின்றன. அதனால், ௫ம் வகுப்பிலேயே, தனியார் பள்ளிமாணவர்கள், கணினி இயக்கத்தை கற்று, பள்ளி பாடங்களை, 'டிஜிட்டல்' வழியில்படிக்கவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், அரசு பள்ளிகளில், பிளஸ் 1ல்கணினி அறிவியல் என்ற பாடப்பிரிவை எடுத்தால் மட்டுமே கணினி இயக்குதல் குறித்துபடிக்க முடியும். அதேநேரம், சில பள்ளிகளில் சிறப்பாசிரியர் என்ற அடிப்படையில்,கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால்,பாடப் புத்தகமோ, முறையான வகுப்போ, தேர்வோ கிடையாது.சான்றிதழை ஒப்படைக்க திட்டம்:தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர்குமரேசன் கூறியதாவது:தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட, 2,000 மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல்பாடப்பிரிவே இல்லை. கணினி அறிவியலில், பி.எட்., முடித்தவர்கள், ஆசிரியர்தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு எழுத முடியாது; கல்வி அதிகாரி பணிக்கான,ஏ.இ.ஓ., - டி.இ.ஓ., தேர்வையும் எழுத முடியாது.அதனால், 21 ஆயிரம் பேர் கணினிஅறிவியல் முடித்து விட்டு, வேலையில்லாமல் தவிக்கிறோம்; போட்டித் தேர்வுக்கும்வாய்ப்பில்லை. எனவே, எங்கள் சான்றிதழ்களைஅரசிடம்ஒப்படைக்கும் போராட்டம் நடத்தஉள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக