சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்ஆட்சியின் இறுதி நேரத்திலாவது போராட்டங்கள் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் அல்லது அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்ற எண்ணமே போராட்டங்களுக்கு காரணம்.
முந்தைய ஆட்சி காலத்தில் பேராட்டத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அ.தி.மு.க. பொது செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா உறுதியளித்தார்.தற்போது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக அரசு துறையினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் உ.மா. செல்வராஜ் அளித்த சிறப்பு பேட்டி,
உங்கள் சங்கத்தில் எத்தனை பேர் உள்ளனர்?
பொய் சொல்ல விரும்பவில்லை 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் அனுதாபிகள் ஏராளம்.
தேர்தல் நெருங்குவதால் தான் போரட்டாமா?
ஒவ்வொரு மாதமும்கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேற வகையான போராட்டங்களில் ஈடுபடுகிறோம். இப்போது தீவிரமாகி இருக்கிறோம்.
நான்கரை ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க 17 முறை கடிதம் கொடுத்துள்ளோம். ஜன 21-ம் தேதி கூட கடைசியாக முதல்வரை சந்திக்க தேதி கேட்டோம். ஆனால் இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை. இது தான் எங்களுக்குள்ள ஆதங்கள்.
முதல்வர் சந்திக்கவில்லை எனில் தலைமை செயலாளரை சந்திக்க வேண்டியது தானே?
பொதுவாக கோரிக்கைகளை நிறைவேற்ற முதலில் மனு கொடுப்போம்.பிறை துறை அதிகாரிகள் தலைமை செயலாளர்,அமைச்சர்கள் எல்லாவற்றிற்கும் பிறகு முதல்வரை சந்தித்து மனு கொடுப்பது நடைமுறை.. இந்த ஆட்சியில்தலைமை செயலாளரை கூட சந்திக்க முடியாதது வருத்தமளிக்கிறது. கோரிக்கைகளை அமைச்சரிடம் கொண்டு செல்வதாக துறை அதிகாரிகள் கூறினர்.
அமைச்சர்களாவது பேசியுள்ளார்களா?
அமைச்சர்களும் எங்களை பலமுறை சந்தித்துள்ளனர். இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறுகின்றனர். ஆனால் கோரிக்கை நிறைவேறியபாடில்லை. முதல்வர் சந்தித்தால் தானே எங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க இயலும்.
2004-ல் நடந்தது போன்று ஒட்டுமொத்த போராட்டம் திரும்புமா?
வாய்ப்புள்ளது தற்போது ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்துகின்றனர்.
பொதுவாக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக கருதப்படும் என்.ஜி.ஓ. கூட போராட்டம் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் எங்கள் அமைப்பு ஆசிரியர் சங்கங்களுடன் பேசி ஒன்றாக போராடவுள்ளது. அது போல அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து போராட வாய்ப்புள்ளது.
அரசு ஊழியர் விவகாரங்களில் கருணாநிதி, ஜெயலலிதா ,யார் கரிசனம் காட்டுவர்?
கருணாநிதி எங்கள் சங்க வெள்ளிவிழாவில் கலந்து கொண்டு சில கோரிக்ககைளை நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.
2004-ல் அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம்வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினார். மேலும் தேர்வ நடத்தி தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதாக தெரிவித்தார். ஆனால் இந்தஆட்சியில் ஒருகோரிக்கைகூ நிறைவேற்றப்படவில்லை.
தி.மு.க. ஆட்சியின் போது புதிய ஒய்வூதிய திட்டத்தை எதிர்த்து 2011-ல் பெரியளவில் போராட்டம் வெடித்தது.
அப்போது எதிர்க்கட்சி தலைவரானதற்போதைய முதல்வர் ஜெ., எங்கள் சங்கத்தை மட்டம் அழைத்து பேசினார்.
ஆட்சிக்கு வந்தவுடன் புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என உறுதியளித்தார். அத்துடன் தேர்தல்அறிக்கையிலும் அறிவித்தார்.ஆனால் சொன்னதுடன் சரி, நிறைவேற்றவில்லை. எங்களை சந்திக்க கூட அவர் தயாராக இல்லை. அதுதான் கசப்பான அனுபவம்.
தேர்தலில் அரசு பணியாளர் ஒட்டு யாருக்கு?
அரசு பணியாளர் சங்கம்,கோரிக்கைகளை அனைத்து கட்சியினருக்கும் வழங்கவுள்ளது. இதில் எந்த கட்சி எங்கள் கோரிக்கைகளை அதிகளவில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு நிறைவேற்ற உறுதியளிக்கிறதோ, அவர்களுக்கு எங்கள் ஒட்டு உண்டு. இவ்வாறு பேட்டியளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக