லேபிள்கள்

19.2.16

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர்
அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.இந்த பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.


இதுகுறித்த அறிவிப்பு கிடைக்கப்பெறாத தனித் தேர்வர்கள்,சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட கல்வி அலுவலரை நேரில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக