லேபிள்கள்

14.2.16

கட்டாய டி.சி., வழங்கினால் எச்.எம்.,கள் மீது நடவடிக்கை பாயும்

நுாறு சதவீத தேர்ச்சிக்காக, மாணவர்களுக்கு மாற்று சான்றிதழான, டி.சி.,யை கொடுத்து வெளியேற்றினால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'
என,பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரித்து உள்ளார்.அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி காட்ட வேண்டும் என, கல்வித் துறை அதிகாரிகள்அறிவுறுத்தி உள்ளனர்.


அதன்படி, பாடம் நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.ஆனால், இதை தவறாக புரிந்து கொண்ட பல தலைமை ஆசிரியர்கள், 100 சதவீத தேர்ச்சிக்காக, நன்றாக படிக்காத மாணவர்களை, தேர்வுக்கு முன்பே, டி.சி., கொடுத்து வெளியேற்றும் நிலை உள்ளது.விருதுநகர் மாவட்டம், எஸ்.அம்மாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, நான்கு ஆண்டுகளாக, 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.

 இந்த பள்ளியில், 10ம் வகுப்பில் நன்றாக படிக்காத, எட்டு மாணவர்களுக்கு கட்டாயமாக, டி.சி., கொடுத்து அனுப்பியதாக, மாணவர்களின் பெற்றோர் புகார்அளித்தனர்.இதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தி, மாணவர்கள் மீண்டும் பள்ளியில்சேர்க்கப்பட்டனர்.இதை தொடர்ந்து, அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், 'படிக்காத மாணவர்களை, 100 சதவீத தேர்ச்சி நோக்கத்தில், கட்டாய டி.சி., கொடுத்து அனுப்ப கூடாது. மாறாக, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, நல்ல மதிப்பெண் பெற வைக்க வேண்டும். டி.சி., கொடுப்பதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக