லேபிள்கள்

20.2.16

பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிப்., 25ல் பேரணி'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுக்குழுவின் உயர்மட்டக் குழு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் ரங்கராஜன் தலைமையில், இன்று கூடி, மாவட்ட தலைநகரங்களில் பேரணி; பிப்., 25ல் சென்னையில் கோட்டை நோக்கி பேரணி போராட்டத்தை அறிவித்துள்ளது.

பிப்., 26ம் தேதி முதல், 3.5 லட்சம் ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்' அறிவித்து உள்ளனர். இதனால், கல்வித் துறையினர் மற்றும் தேர்வுத் துறையினர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். 
நிலைமையை சமாளிக்கபொதுத்தேர்வில், தேர்வு மையங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. தேர்வு மைய மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், விடைத்தாள் மையம் பாதுகாப்பு, வினாத்தாள் பாதுகாப்பாளர்கள், பறக்கும் படை அமைத்தல், நிலையான கண்காணிப்பு படை அமைத்தல் என, பல பணிகள் நடக்க வேண்டியுள்ளது. இவை, ஆசிரியர்களின் போராட்டத்தால் முடங்கியுள்ளன. 
எனவே, நிலைமையை சமாளிக்க, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், 'தனியார் பள்ளி ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக