லேபிள்கள்

29.5.16

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் சத்யா வித்யாலயா மாணவர்கள் சாதனை

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில், ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா மாணவர்கள் நால்வர் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று தேசிய சாதனை படைத்துள்ளனர்.
இப் பள்ளியில் தேர்வு எழுதிய 29 பேரும் முழுத் தேர்ச்சிபெற்றுள்ளனர். மாணவிகள் ஆர்.காயத்திரி, எஸ்.கௌசிகா, மாணவர்கள் டி.கோகுல் பாரதி, டி.சசி பாலன் ஆகிய நால்வரும் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று தேசிய சாதனை படைத்துள்ளனர்.15 மாணவர்கள் ஏ1 கிரேடு பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 16 பேரும், தமிழில் 15 பேரும், ஹிந்தியில்ஒருவரும், கணிதத்தில் 4 பேரும், அறிவியலில் 7 பேரும், சமூக அறிவியலில் 11 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் தாளாளர் சி.குமரேசன், நிர்வாக அறங்காவலர்கள் டாக்டர் சித்ரா, கே.அரவிந்தன், ஒருங்கிணைப்பாளர் அமுதா, முதல்வர் எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக