லேபிள்கள்

2.6.16

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: ஜீலை 17 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளை இயக்குவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் அரசு
நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட கடைபிடிக்கவில்லை என மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 746 பள்ளிகளையும் வரும் கல்வி ஆண்டுக்குள் மூட வேண்டும் என்றும், அந்த பள்‌ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க அ‌னுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.இந்த வழக்கு தலைமை ‌நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்‌, நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து முடிவு செய்வதற்கான குழுவிற்‌கு ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால்‌ வழக்கைஒத்தி வைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், ஆய்வுக் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு முடுவெடுக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 17ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக