பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, இதுவரை, 1.76 லட்சம் பேர், அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை,
'ஆன்லைனில்' பதிவு செய்ய, இன்று கடைசி நாள்.சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில்,அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல், ஆன்லைனில் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.அண்ணா பல்கலை இணையதளத்தில், 2.45 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 1.76 லட்சம் பேர் மட்டுமே முறையாக விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய, இன்று கடைசி நாள்.அதேநேரம், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கான விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நகல் எடுத்து, உரிய ஆவணங்களுடன், ஜூலை, 4க்குள், அண்ணா பல்கலைக்கு கிடைக்குமாறு தபால் வழியாகவோ, நேரிலோ ஒப்படைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக