தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி ஊசலாட் டத்தில்உள்ளது.
இப்பள்ளிகளை மூடக்கோரி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அளித்த அவகாசம், நேற்றுடன் முடிந்த நிலையில், இப்பள்ளிகள் மூடப்படுமா அல்லது தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படுமா என்பது இன்று தெரியவரும்.
.தமிழகத்தில், 6,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், பள்ளி கல்வி துறையின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகள், நில அளவு, கட்டடங்கள் குறித்த விதிமுறைகளை, 2004ல், கல்வியாளர் சிட்டிபாபு தலைமையிலான குழு நிர்ணயம் செய்தது. இந்த விதிமுறைகளின் படி, உள்கட்டமைப்பு வசதிகள்உடைய பள்ளிகளுக்கு மட்டும், ஆண்டுதோறும்மெட்ரிக் இயக்குனரகம் மூலம் அங்கீகாரம்புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
பூர்த்தி செய்யவில்லைஇந்நிலையில், சிட்டிபாபு குழு விதிமுறைகள்படி, வசதிகள் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளை, தமிழக அரசு ஆய்வு செய்து, அவற்றுக்குகால அவகாசம் வழங்கியது. ஆனாலும், 2015 வரை, இந்த பள்ளிகள் விதிமுறைகளை பூர்த்திசெய்யவில்லை. அதனால், 746 பள்ளிகளின் அங்கீகாரம், கடந்த கல்விஆண்டுடன் முடிந்தது.அதன்பின், பள்ளிகள் சார்பில், தமிழக அரசிடம் மனு அளித்ததை தொடர்ந்து, ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டு, 2016 மே, 31 வரை அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டது.அதன் பிறகும், குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் நில அளவை அதிகரிக்கவில்லை. இதுகுறித்து, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், 'பாடம்' நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 746 மெட்ரி குலேஷன் பள்ளிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வந்தன. அங்கீகாரமில்லாமல் செயல்பட்ட இப்பள்ளிகளுக்கு, மாணவர்களின் நலனைக் கருதி, மே, 31 வரை தற்காலிகமாக, ஒரே ஒரு முறை என்ற அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாத, இந்த பள்ளிகளை,மே மாதத்திற்கு பிறகு இயங்க அனுமதிக்கக் கூடாது.2016 - 17ம் கல்வியாண்டுக்குள் மூட வேண்டும். இப்பள்ளி மாணவர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அங்கீகாரமில்லாத இந்த, 746 பள்ளிகளின் பெயர், முகவரியை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டது.தள்ளி வைத்ததுஇந்த மனு, மே, 4ல் விசாரணைக்கு வந்த போது,நீதிபதிகள் சசிதரன், விமலா அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வுக்கு மாற்றி, விசாரணையை, ஜூன், 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது.இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஐந்து லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கருதி, பள்ளிகளின் அங்கீகாரத்தை நீட்டிக்க, தனியார் பள்ளிகள் சார்பில் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.இந்த பிரச்னையில், அரசின் நிலையை பொறுத்து, அங்கீகாரம்முடிந்த பள்ளிகள் மூடப்படுமா அல்லது தொடர்ந்து இயங்குமா என்பது தெரியவரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக