லேபிள்கள்

2.6.16

மாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை: நலத்திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, புத்தகம், நோட்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.


 2016 - 17ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா 5 மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார்.அதே போல, 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களையும், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இணைச் சீருடைகளை வழங்கும் திட்டங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக 5  மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களையும், இணைச் சீருடைகளையும் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக