லேபிள்கள்

4.6.16

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; மாணவர் சேர்க்கை விவரம் சேகரிப்பு.

கடந்த, 2012-13ம் ஆண்டில் இருந்து, அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டு, ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை, உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர்
இடையே, சமீப காலமாக ஆங்கிலவழிக்கல்வி மீதான மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது. 

அதனால், சரியும் மாணவர் சேர்க்கையை தடுத்து நிறுத்த, அனைத்து பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், கடந்த, 2012-13ம் கல்வியாண்டில் இருந்து, படிப்படியாக பெரும்பாலானஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பிரிவு துவக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அவர்களுக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் மூலமாகவே நடத்தப்படுவதால், பெற்றோர்களுக்கு, பெரிய அளவில் ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லை. இதனால், தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கிலவழிக்கல்வி பிரிவுக்கு உள்ள வரவேற்பினை கண்டுபிடிக்கும் வகையில், கடந்த,2012-13ம் ஆண்டில் இருந்து, ஆங்கிலவழிக்கல்வி பிரிவு துவக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கையை, ஆண்டு வாரியாக தொகுத்து, தனித்தனியேஅறிக்கையாக அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக