லேபிள்கள்

3.6.16

கல்லூரி திறப்பு தேதியில் குழப்பம் அதிகாரபூர்வ உத்தரவு தாமதம்.

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் திறப்புதேதி, இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
83 அரசு கல்லுாரிகளில், கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

கலை, அறிவியல் கல்லுாரிகள், ஜூன் 8ம் தேதி திறக்க உள்ளதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்களில், நேற்று தகவல் வெளியான நிலையில், 'இன்னும் அதிகாரபூர்வ உத்தரவு, அரசிடமிருந்து வரவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

அரசிடமிருந்து அதிகாரபூர்வ உத்தரவு வரும் வரை, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை மட்டும் நடத்தி, நிர்வாக பணிகளை கவனிக்குமாறு, கல்லுாரி முதல்வர்களை, இயக்குனரக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கல்லுாரி திறப்பு தேதி, இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகாததால், மாணவர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக