லேபிள்கள்

30.5.16

பி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி.

அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு ஆன்-லைன்
மூலம் மட்டுமே பதிவு செய்து விண்ணப்பிக்கும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.


 ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான ஆன்-லைன் பதிவு தொடங்கியது. பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை (மே 31) கடைசி நாளாகும்.1,76,836 பேர்: ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த 2,45,217 பேரில், 1,76,836 பேர் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.பூர்த்தி செய்த விண்ணப்பம் வந்து சேர ஜூன் 4 கடைசி: பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு வந்து சேர ஜூன்4-ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஜூன் 20-ஆம் தேதிக்கு மேல் கலந்தாய்வு: 
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கிய சில தினங்களில் பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும் நடைமுறை உள்ளது. எனவே, பி.இ. கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக