ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை, 15ம் தேதி துவங்கவுள்ளதாக, 'வாட்ஸ்- ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில்
பரவிவருவதால், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கு ஏப்., மாதம் விண்ணப்பங்கள் பெற்று, மே இறுதியில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். நடப்பு கல்வியாண்டில், தேர்தல் காரணமாக கலந்தாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறும் முதல்கட்ட பணிகள் கூட, இதுவரை துவக்கப்படவில்லை என்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.கலந்தாய்வு தேதி அறிவிப்பை ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ள சூழலில், ஜூலை, 15 முதல் கலந்தாய்வு துவங்குவதாகவும், 15ம் தேதி உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், 16ம் தேதி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 17ம் தேதி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 18ம் தேதி ஆசிரியர்களுக்கும் நடக்கவுள்ளதாகவும், 'வாட்ஸ் ஆப்'ல் அவசர செய்தியாக பரவிவருகிறது. இதனால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் சாமிசத்யமூர்த்தி கூறுகையில், ''இதுவரை, கலந்தாய்வு தேதி குறித்த அதிகாரி அறிவிப்புகள் வெளிவரவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையானதல்ல. விரைவில் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக தேதியை அறிவிக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக