பள்ளிக் குழந்தைகளுக்கு, மாம்பழச்சாறு வழங்கும் திட்டம், உகந்த திட்டமல்ல' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
தி.மு.க., - செங்குட்டுவன்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மாம்பழங்களில், 2 லட்சம் டன் மாம்பழம், ஆலைகளில் பழச்சாறாக்கப்படுகிறது. மீதம், 1.50 லட்சம் டன் மாம்பழம் வீணாகிறது. பழச்சாறும் ஏற்றுமதியாகாததால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே, பழச்சாறுகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு, சத்துணவுடன் மாம்பழச்சாறு வழங்கலாம். இதை அரசு செய்யுமா?அமைச்சர் சரோஜா: அரசிடம் திட்டம் எதுவுமில்லை.
முதல்வர் ஜெயலலிதா: மாம்பழச்சாறும், மாம்பழக் கூழும் உபரியாக உள்ளது என்றால், அதற்கு என்ன வழி காணலாம்; எப்படி விற்பனை செய்யலாம்; எப்படி ஏற்றுமதி செய்யலாம் என, பல வழிகளை அரசு ஆராயும்.அதற்காக, பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழ சாற்றை கொடுத்தால், பள்ளிக் குழந்தைகள் எல்லாருக்கும், இது ஒத்துக்காது. பல குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிற ஆபத்து இருக்கிறது. எனவே, அது உகந்த திட்டம் அல்ல.
செங்குட்டுவன்: கடந்த, 2011ல், கலெக்டர்கள் மாநாட்டில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கொடுத்த பரிந்துரையை ஏற்று, மதிய உணவு திட்டத்துடன், மாம்பழ, 'மில்க் ஷேக்' 200 மி.லி., வழங்கப்படும் என, முதல்வர் தான் அறிவித்தீர்கள்.
முதல்வர் ஜெயலலிதா: வாழ்க்கையில், பல கட்டங்களில் பலவற்றை கூறுகிறோம். அதன்பின், அதை பற்றி நன்றாக புரிந்து கொண்ட பின், கருத்தை மாற்றிக் கொள்கிறோம். அன்றைய தினம் மாம்பழச்சாறு வழங்கலாம் என்று நான் நினைத்தேன். அதன்பின், டாக்டர்கள் மாம்பழச்சாறு வழங்கினால், குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும்என, கூறினர். அதனால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். மாம்பழச் சாறுக்கு பதிலாக, மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா?
முதல்வர் ஜெயலலிதா: இது, மெயின் கேள்வியை ஒட்டியதாக இல்லை. வேண்டும் என்றால், எதிர்க்கட்சி தலைவர் தனி கேள்வி கேட்கட்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக