தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
விளையாட்டுப் பிரிவிற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள 500 இடங்களுக்கு 1513 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறியலாம்.
நாளை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வும், 27ஆம் தேதி பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக