அரசு கல்லூரிகள், பல்கலைகளில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புக்கு, ஜூலை, 4ம் தேதி முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை, சென்னை பல்கலை, தனியார் இன்ஜி., கல்லுாரிகள் போன்றவற்றில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புக்கு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி மூலம், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, நேற்று அறிவிக்கப்பட்டது. கோவை தொழில்நுட்ப கல்லூரியின்,www.gct.ac.in/www.tn-mbamca.comஇணையதளம் வழியே, இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 4ம் தேதி முதல், 15ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள், உரிய ஆவண நகல்களுடன், கோவை தொழில்நுட்ப கல்லுாரிக்கு, தங்கள் விண்ணப்ப பிரதியை, தபாலில் அனுப்ப வேண்டும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக