லேபிள்கள்

19.6.16

அரசு பள்ளிகளில் கலைக்கப்படும் என்.சி.சி., படை வசூல் வேட்டையால் திணறும் மாணவர்கள் Dinamalar

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே, தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,யில் சேர முடியும் என்பதால், அதன் செயல்பாடு, கூடாரத் துடன் காலியாகி வருகிறது.

மத்திய அரசின் தேசிய மாணவர் படை என்ற தன்னார்வ திட்டம், ராணுவம் மூலம் செயல் படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கு தனியாக ராணுவ அதிகாரிகள், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் போன்றோர் நியமிக்கப்பட்டு, மாவட்ட வாரியா கவும், மண்டல வாரியாகவும் நிர்வாகம் செய்யப் படுகிறது.
தமிழகத்தில் இந்த திட்டம் அனைத்து அரசு உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி கள், தனியார் பள்ளிகளில் செயல்படுத்தப் படுகி றது. இதில், 13 வயது பூர்த்தியான அல்லது, 9ம்வகுப்பு மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் தலா, 50 பேர் கொண்ட,
இரண்டு முதல் நான்கு படைகள் அமைக்கப் பட்டு, அதற்கு தனியாக உடற்கல்வி பயிற்சி யாளர் அல்லது ராணுவத்தில் பயிற்சி முடித்து ஆசிரியரான வர் அல்லது உடற்கட்டு கொண்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி யளிக்கப் படுகின்றனர்.
பயிற்சிக்கு பின், அவர்கள் தங்கள் பள்ளியின் படையை நடத்துவர்.முன்பெல்லாம் என்.சி.சி.,யில் சேர மாணவர்களுக்கு இடம் கிடைக்காத சூழல் ஏற்படும். ஆனால், சமீப காலமாக என்.சி.சி.,க்கான மவுசு குறைந்து ஒவ்வொரு பள்ளியிலும் என்.சி.சி., படையை கலைத்து வருகின்றனர்.
இதற்கு என்.சி.சி., மாணவர்களிடம் வசூல் வேட்டை நடத்துவதே முக்கிய குற்றச்சாட்டாக கூறப் படுகி றது. மத்திய அரசின் நிதியில் மாநில, 'டெபுடி டைரக் டர் ஜெனரல்' மூலம், மாநில பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் மேற்பார்வையில் என்.சி.சி., நடத்தப்படுகிறது.
இதில் இடம் பெறும் மாணவர்களுக்கு, இலவசமாக, இரண்டு காக்கி பேன்ட், சட்டை, 'ஷூ, பெல்ட்' மற்றும் தொப்பி வழங்கப்படும். ஆனால், தற்போது இதற்காக மாணவர்களிடம் மறைமுகமாக பணம் வசூலிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில், இரண்டு, 'செட்'டுக்கு பதில், ஒரு, 'செட்' மட்டும் வழங்கப்படுகிறது. மற்றொன்றை தனியாக கடைகளில் வாங்க அறிவுறுத்தப்படுகின் றனர்.இதேபோல், மாணவர்களிடம், 'ரெஜிமண்ட் பண்ட்' என, ஆண்டுக்கு, 150 ரூபாய் வசூலிக்கப் படுகிறது.
மேலும், பொது சேவைக்கான முகாம்கள்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக