லேபிள்கள்

16.7.16

அரசு பள்ளி மாணவர்களை ஐஐடி நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் திட்டம்: இந்த ஆண்டு மேலும் 120 பள்ளிகளுக்கு விரிவாக்கம்

ஐஐடி ஜெஇஇ உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் திட்டம் இந்த ஆண்டு மேலும் 120 அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்விநிறுவனங்களில் தமிழகத்தில் இருந்து சேரும் மாணவர்களின்எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது.



அவ்வாறு சேரும் மாணவர்கள் கூட தனியார் பள்ளிகளில் படித்து புகழ்பெற்ற கோச்சிங் மையங்களில் பயிற்சி பெற்றவர்களாகவே உள்ளனர். அரசுப் பள்ளிகளில் நன்றாக படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் அதிகபட்ச கனவு கூட அண்ணா பல்கலைக்கழகம் அல்லது அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதாகத்தான் உள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவது பற்றி அவர்கள் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. இத்தகைய உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜெஇஇ எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது என்பதைக் கூட பிளஸ் 2 முடிக்கும் தருவாயில்தான் அவர்களுக்கு தெரிய வருகிறது.இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களை ஐஐடி ஜெஇஇ உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழை வுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் “டேன்எக்ஸெல்” (TANEXCEL) என்ற புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களை படிப்படியாக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது இந்த திட்டத்தின் பிரதான நோக்கம்.மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) மாநிலதிட்ட இயக்ககம் மூலமாக இது செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 100 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.முதல்கட்டமாக அங்குள்ள கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி பேரா சிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.ஐஐடி போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் மனப்பாட அறிவைக்காட்டிலும் புரிந்துகொள்ளும் திறனை சோதிக்கும் வகையில்தான் வினாக்கள் அமைந்திருக்கும். அதற்கேற்ப மாணவர்களை தயார் படுத்தும் வகையில் ஆசிரியர் களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட் டன. இந்த பயிற்சிக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டது.அதன்படி, கணிதம், அறிவியல் பாடங்களில் ஒரு விஷயத்தை மேலோட்டமாக இல்லாமல் அதன் அடிப்படையை மாணவர்கள் நன்கு உணர்ந்து அதை பயன்பாடு சார்ந்து தெரிந்துகொள்ளும் வகை யில் மாணவர்களுக்கு ஆசிரியர் கள் வகுப்பு எடுப்பார்கள்.இந்தப் பயிற்சி 100 அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டு தொடர்ந்து வெற்றிகர மாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் செயல்பாடுகளை நேரில் வந்து ஆய்வு செய்த மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளும் திருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், ஐஐடி ஜெஇஇ உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு அரசுப் பள்ளி மாணவர் களை தயார்படுத்தும் இந்த திட்டம் 2016-17-ம் கல்வி ஆண்டில்மேலும் 120 அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த தமிழக ஆர்எம்எஸ்ஏ மத்திய அரசிடம் அனுமதி கோரியது.இதற்கு மத்திய அரசும் உடனடியாக ஒப்புதல் அளித்து ஏறத்தாழ ரூ.40 லட்சத்தை ஒதுக்கியது.இதைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் மேலும் 120 அரசுப் பள்ளிகளில் இந்த பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக ஆர்எம்எஸ்ஏ திட்ட அதிகாரிகளுள் ஒருவர் தெரிவித்தார். இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக