சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை பொறியியல்(B.E.), இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture), இளநிலைஅறிவியல் செவிலியர் (B.Sc. Nursing), மற்றும் இளநிலை
மருந்தாக்கியல்(B.Pharm.) படிப்புகளில் சேருவதற்கான சமவாய்ப்பு எண் (Random Number) புதன்கிழமை வெளியிடப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட இளநிலைஅறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) 1000 இடங்களுக்கும், தோட்டக்கலை (B.Sc. Horticulture)- 70 இடங்களுக்கும், இளநிலை பொறியியல் (B.E.)- 810 இடங்களுக்கும், இளநிலை அறிவியல் செவிலியர் (B.Sc. Nursing)- 100 இடங்களுக்கும், இளநிலை மருந்தாக்கியல் (B.Pharm.) -60 இடங்களுக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) படிப்புக்கு 11595 விண்ணப்பங்களும், தோட்டக்கலை(B.Sc. Horticulture) படிப்புக்கு 601 விண்ணப்பங்களும், இளநிலை பொறியியல்(B.E.), படிப்புக்கு 1988 விண்ணப்பங்களும், இளநிலை அறிவியல் செவிலியர் (B.Sc. Nursing) படிப்புக்கு 1216 விண்ணப்பங்களும், மற்றும் இளநிலை மருந்தாக்கியல் (B.Pharm.), படிப்புக்கு 1111 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. அவற்றில் 711 இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) விண்ணப்பங்களும், 35 தோட்டக்கலை(B.Sc.Horticulture), 114 இளநிலை பொறியியல்(B.E.), விண்ணப்பங்களும், 78 இளநிலை அறிவியல் செவிலியர் (B.Sc. Nursing) விண்ணப்பங்களும், 4 இளநிலை மருந்தாக்கியல் (B.Pharm.) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture), இளநிலை பொறியியல்(B.E.), இளநிலை அறிவியல்செவிலியர்(B.Sc. Nursing), மற்றும் இளநிலை மருந்தாக்கியல்(B.Pharm.) படிப்புகளுக்கு “சமவாய்ப்பு” எண்களை (Random Number)புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் செ.மணியன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் கே.ஆறுமுகம், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் இராம.சந்திரசேகரன், பொறியியல் புல முதல்வர் முனைவர் சி.ஆண்டனி ஜெயசேகர், கலைப்புல முதல்வர் முனைவர் ஆர்.இராசேந்திரன், மொழிப்புலமுதல்வர் வி.திருவள்ளுவன், தொலைதூரக் கல்வி இயக்குநர் முனைவர் எஸ்.புகழேந்தி, செவிலியர் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.கலாவதி, கல்வி திட்ட இயக்குநர் கே.மணிவண்ணன், மாணவர் சேர்க்கை பிரிவு ஆலோசகர் பேராசிரியர் முனைவர் டி.ராம்குமார், மக்கள்-தொடர்பு அலுவலக மேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in.-ல் தங்களது “சமவாய்ப்பு” எண்ணை (Random Number) தெரிந்து கொள்ளலாம். தரவரிசை பட்டியல் (Rank List) ஜூலை 16-ம்தேதி வெளியிடப்படும். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மாணவர்கள், மேல் நிலை (HSC) படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும்தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு 3% சதவீத இடங்கள் தமிழக அரசின்விதிப்படி ஒதுக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வு கடிதம் அனுப்பப்படமாட்டாதுமேலும் விபரங்களுக்கும், தகவல்களுக்கும் பல்கலைக்கழக இணைய தளம் www.annamalaiuniversity.ac.in பார்க்கவும்.
தொடர்புக்கு auadmission2016@gmail.com மேலும் உதவி மைய தொலைபேசி எண்களிலும் (04144-238348 மற்றும் 238349) தகவல்கள் பெறலாம் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக