லேபிள்கள்

14.7.16

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து விடுப்பு எடுத்து பள்ளி செல்லாத குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முதன்முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுபள்ளிகளில் ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமைத்திட்டம் நடைமுறையில் இருப்பதால் தமிழக அளவில் முதன்முறையாக ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை,கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்படி மாவட்ட அளவில் மொத்தமுள்ள 85-அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 38-அரசு மேல்நிலைப்பள்ளிகள்,10-அரசு உயர்நிலைப்பள்ளிகள் 1-ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் என 50-பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்காக சம்மந்தப்பட்ட பள்ளி கனிணி ஆசிரியர்களுக்கு, கனிணி இயக்குபவர்களுக்கு தேசிய தகவல் மைய ஊழியர்களால் செயல்முறை விளக்கம் தெரப்பட்டுள்ளது.இந்நிலையில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு தமிழக அளவில் முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.இது சோதனை அடிப்படையில் குரும்பலூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்ட திட்டம் தற்போது 100-மாணவர்களுக்கு கீழ் தம்பிரான்பட்டி, முருக்கன்குடி,வரகூர்,அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 200-மாணவர்களுக்கு கீழ் காடூர், கூடலூர்,வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும், 300-க்கும் மேல் உள்ள துங்கபுரம்,பேரளி அரசு மேல்நிலைப்பள்ளிகள் என 8-பள்ளிகளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் மாவட்ட முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு கொண்டுவரப்படவுள்ளன.
இதுகுறித்து குரும்பலூர் அரசு கல்லூரி பேராசிரியர் சந்திரமெளலி கூறும்போது,இந்த நடைமுறை மூலம்,கட்டைவிரல் ரேகை பதிவு செய்த நேரத்தைக் கொண்டு தலைமையாசிரியர்,ஆசிரியர்கள்,அலுவலர்களோடு இனி மாணவர்களின் தாமத்தையும் கண்காணிக்க முடியும்.தொடர்ந்து விடுப்பு எடுத்த பள்ளி செல்லாத குழந்தைகளை நல்வழிப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக