லேபிள்கள்

13.7.16

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று துவக்கம்

தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர, மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. கால்நடை அறிவியல் படிப்பில், 320 இடங்கள்: கோழியின வளர்ப்பு, பால்வளத் தொழில் நுட்பம் மற்றும் மீன்வள அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா, 20 இடங்கள், என இப்பல்கலைக் கழகத்தில் இளநிலை படிப்புகளில், 380 இடங்கள் உள்ளன. இப்படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்தோருக்கான, தரவரிசைப் பட்டியல், ஜூலை 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில், இன்று கவுன்சிலிங் துவங்குகிறது. முதல் நாளில், விளையாட்டு வீரர்கள், பிளஸ் 2 தொழில் படிப்பு படித்தவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இரண்டாம் நாளில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.
அன்றைய தினம், தரவரிசையில் முதல், 10 இடங்களை பிடித்தவர்களுக்கு கால்நடை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, சேர்க்கை கடிதம் வழங்குகிறார். முதல், இரண்டு நாட்கள், கால்நடை அறிவியல் படிப்பு களுக்கும், இறுதி நாளில், இதர மூன்று படிப்பு களுக்கான கவுன்சிலிங்
நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக