லேபிள்கள்

15.7.16

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இனி நுழைவுத் தேர்வு கிடையாது : உச்சநீதி மன்றம் அதிரடி

மருத்துவ படிப்பு படிக்க தேசிய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு நீட் ஆகும் இந்த நிலையில் இந்த நீட் மருத்துவ படிப்பு பொது நுழைவுத் தேர்வு இனி கிடையாது என மத்திய அரசு அதிரடியாக அவசர சட்டம் ஒன்றை  பிறப்பித்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது இதையடுத்து இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதி  50 சதவீத மாநிலங்களில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்றும் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த  அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக