லேபிள்கள்

13.7.16

ஜூலை 29ல் வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டம்

இந்தியா முழுவதும் வரும் 29ம் தேதி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. தேசியமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகள் தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட அரசின் முடிவுகளை எதிர்த்து அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, இந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று மற்றும் நாளை நடைபெறுவதாக இருந்தது. இதற்கு டில்லி ஐகோர்ட் தற்காலிக தடை விதித்தது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 29ம் தேதி இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக